👉🏻 ஏன் எபிரேயு பாஷையிலிருந்து கிரேக்கு பாஷைக்கு வேதத்தை மொழி பெயர்த்தார்கள் ⁉️
⚜️ கிரேக்க மன்னன் *“இரண்டாம் தாலமி"* காலத்தில்தான் இந்த மொழி பெயர்ப்பு வேலைகள் நடந்தது.
இவருடைய முழு பெயர் *தாலமிபிலாடெல்பஸ்*
*(Ptolemy Philadelphus)*
⚜️ *ஏன் இவர் கிரேக்க மொழி பெயர்ப்புக்கு ஒத்துக் கொண்டார்* ⁉️
◆ யூதர்கள் மத வைராக்கியம் நிறைந்தவர்கள், தங்கள் ஆலய கூடுகைகளில் எபிரேயு பாஷையில்தான் வேதத்தை வாசித்து கொண்டு இருந்தார்கள். இப்போது கிரேக்கு பாஷையில் மொழி பெயர்த்துவிட்டால் ஆராதனையை கிரேக்கு பாஷையில் நடத்து ஆரம்பித்து விடுவார்கள். சில காலத்திற்குள் சுத்தமாக தங்கள் தாய் மொழியை மறந்து கிரேக்க மொழிக்குள் வந்து விடுவார்கள் என்று நினைந்து இந்த மொழி பெயர்ப்பு வேலையை செய்யுமாறு கூறினார்.
◆ இதற்கு யூத ரபிமார்கள் சம்மதித்தார்கள்.
🌟 *செப்டுவஜின்ட்* - ல் 39 புத்தகங்கள் 4 பிரிவுகளாக பிரித்தார்கள்
• 1. பஞ்சாகமம்
• 2. வரலாற்று ஆகமங்கள்
• 3. கவிதை புத்தகங்கள்
• 4. தீர்க்கதரிசன புத்தகங்கள்
🌟 (தானாக்கில் 3 பிரிவுகள்.. மறந்து விடக்கூடாது..)
• 1. தோரா
• 2. நெபீம்
• 3. கெத்துபீம்
⚜️ இதை அடிப்படையாகக் கொண்டே தமிழ் வேதம் மொழிபெயர்க்கப்பட்டது இதைத்தான் வேதத்தின் முதல் பக்கத்தில் பார்க்கிறோம்.
📖 *பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர் யார்* ⁉️
👉🏻 சீகன் பால்கு & ஆறுமுக நாவலர்
( அறுமுக நாவலர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சைவ புலவர். சீகன் பால்க் மொழிபெயர்ப்பு செய்த வேதாகமத்தில் உள்ள நிறைய பெயர்கள் சமஸ்கிருத மொழியில் இருக்கும். அவைகளுக்கு எல்லாம் பெயர் கொடுத்து , முழுவதுமாக முடித்து வைத்தவர் ஆறுமுக நாவலர் ஆவார்.. )
■ முழு பெயர் :
~ பர்த்தலோமேயு சீகன்பால்கு
*〔 BARTHOLOMEW ZIEGENBALG 〕*
■ பிறந்த தேதி :
~ 10-07-1682
■ பிறந்த ஊர் :
~ ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர்
• பரிசுத்த வேதாகமம் மொழி பெயர்ப்பு (எபிரேயு - தமிழ்)
■ இவர் புதிய ஏற்பாட்டை முதலில் தமிழில் மொழி பெயர்த்தார்.
1708 - தொடங்கி 1711– (4 வருஷங்கள்) மொழி பெயர்த்து முடித்தார்.
♣︎ சீகன் பால்கு தமிழை கற்பதில் மிகவும் கஷ்டப்பட்டர்.
♣︎ திண்ணை பள்ளி கூடத்தில் சிறுவர்களுடன் அமர்ந்து மணலில் எழுதி தமிழ்
எழுத்துக்களை படித்தார். (கையில் இரத்தம் வர)
♣︎ தமிழை கற்கும் வரை தன் தாய் மொழி உட்பட எந்த மொழி நூல்களையும் படிக்க
கூடாது என்று வைராக்கியம் கொண்டு படித்தார்.
♣︎ ஒரு நாளைக்கு 10 மணிநேரம் படித்தார்.
♣︎ 8 மாதங்களில் தமிழில் பிழையின்றி பேசவும், எழுதவும் துவங்கிவிட்டார்.
♣︎ இவர் மொழி பெயர்த்த புதிய ஏற்பாடு 494 பக்கங்களைக் கொண்டது.
♣︎ அடுத்ததாக மொழி பெயர்ப்பை அச்சடிக்க வேண்டும்.
♣︎ அச்சு இயந்திரம் இங்கிலாந்திலிருந்து வந்தது. அச்சு இயந்திரம் மிகப்பெரியதாக இருந்தது. அதை இயக்க ஆளில்லை.
♣︎ தரங்கம்பாடியில் இருக்கிறவர்கள் அதை வினோத பொருளாக பார்க்க ஆரம்பித்தார்கள்.
♣︎ இதை இயக்க ராணுவத்தில் ஒருவர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்தார்.
♣︎ ஜெர்மனியிலிருந்து அச்சு எழுத்துக்கள் வந்தது. அவை மிகவும் பெரியதாக இருந்தது.
♣︎ தன்னுடைய முயற்சியில் தளராத சீகன் பால்கு , தரங்கம்பாடியிலேயே, அவரே அச்செழுத்துக்களை வார்ப்பிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
♣︎ அச்சகம், அச்செழுத்து வார்ப்பு இவ்விரண்டும் இந்தியாவில் முதன் முதலில் துவங்கப்பட்டது நமது தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் தான்.
📖 முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் நமது *வேத புத்தகம்* தான் 🔥
*இதுவே தமிழ் வேதம் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்று ஆகும்.*
📖 *LXX* என்ற எழுத்து எதை குறிக்கிறது ⁉️
LXX - *இலத்தின் பைபிள்*
◆ இதற்குபின் கிரேக்கிலிருந்து இத்தாலிக்கு வேதாகமத்தை மொழியாக்கம் செய்தனர்.
*இதன் பெயர் L X X - இலத்தீன் பைபிள்*
L --> 50
X --> 10
X --> 10
----
Total 70
----
◆ 70 பேர் கொண்ட குழு எபிரேயுவிலிருந்து கிரேக்குக்கு மொழி பெயர்த்ததால் *இலத்தீன் பைபிளுக்கு LXX என்ற பெயர் வந்தது.*
📍 70 பேர் (72 என்றும் சொல்கிறார்கள்) ஏனென்றால் *செபடுவஜன்ட் என்றால் கிரேக்கில் 70 என்று அர்த்தம்.*
◆ 1. எபிரேயு மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு முதலில் *கிரேக்க* மொழியிலும் பின்பு *இலத்தீன்* மொழியிலும், பின்பு *பிரெஞ்ச்* மொழியிலும் பின்பு *ஆங்கில* மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு இன்று ஏறக்குறைய 2300 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு
◆ உலகமெங்கும் உள்ள 90 சதவீத ஜனங்களின் கைகளில் *"பரிசுத்த வேதாகமம்"* தவழ்ந்து கொண்டு இருக்கிறது.
📖 *திருவிவிலியத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள்* ⁉️
[2] *46 புத்தகங்கள்*
● 1. எபிரேயு பாஷையில் = 24 புத்தகங்கள்
● 2. நமக்கு பழைய ஏற்பாட்டில் = 39 புத்தகங்கள்
● 3. திருலிலிலியத்தில் =
46 புத்தகங்கள்
No comments:
Post a Comment
Thank you for visiting our page.