விவாகத்தைக் குறித்து ஏழு காரியங்கள்
1. மனிதன் தனிமையாயிருப்பது நல்லது அல்ல என தேவன் கண்டு, விவாகத்தை முதலாவது தேவனே ஏதேன் தோட்டத்தில் வைத்து ஏற்படுத்தினார். முதலாவது திருமண தம்பதிகள்- மணமக்கள்: ஆதாம்-ஏவாள். ஆகவே தேவன் இணைத்ததை மனிதன் ஒருவனும் ஒருக் காலும் பிரிக்காதிருக்கக்கடவன். ஆதி. 2:18,21-24; மத். 19:6; மாற்கு 10:9; 1 கொரி. 7:39; பிர. 4:11,12; மல். 2115,16
2. விவாகம் விபசாரத்தையும் வேசித்தனத்தையும் தடை செய்து, மனித இனம் பலுகவும் பெருகவும் செய்கிறது. ஆகவே விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது. எபி. 13:4; ஆதி. 1:28; 9:1,7; சங். 127:4; 1கொரி.7:9; 1 தீமோ. 5:4
3. மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான். கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான். நீதி. 18:22; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. நீதி. 19:14; குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. நீதி. 31:10-12; ரூத் 3:11; குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள். நீதி.12:4; 14:1; உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடி யைப்போல இருப்பாள். சங்.12813
4. முற்கால பக்தசிரோமணிகளில் பெரும்பாலானோர் விவா கம் பண்ணினவர்களாயிருந்தார்கள். உதா: ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யோசேப்பு, மோசே, ஆரோன், சாமுவேல், தாவீது, யோபு, ஏசாயா, பேதுரு, ஆக்கில்லா, பிலிப்பு முதலியோர்.
5. வேதாகமத்தின் ஆரம்பத்தில் தேவன் முதலாவது விவா கத்தை ஏற்படுத்தினார். வேதாகமத்தின் மத்தியில் (புதிய ஏற்பாட்டில்) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்ட போது (இயேசு) முதலாவது கலியாண வீட்டில் அற்புதம் செய்து தமது மகிமையை வெளிப்படுத்தினார். வேதாக மத்தின் முடிவில் ஆட்டுக்குட்டியானவருடைய கலியா ணம் வருகிறது. யோவான் 2:1-11; வெளி. 19:9
6. விவாகத்தை விலக்குவது பிசாசுகளின் உபதேசம். மனச் சாட்சியில் சூடுண்ட பொய்யர் இதைப் பலவாறாக குழப்பி, சிலர் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகவும் செய்வார்கள். 1 தீமோ. 4:1-3
7. விவாகம் கிறிஸ்துவுக்கும் அவர் மணவாட்டியாகிய சபைக்குமுள்ள ஐக்கியத்தைக் காட்டும் சிறந்த ஒப்பனை யிருக்கிறது. எபே. 5:28-33; 1 பேதுரு 3:5-7; 1 கொரி. 7:3-6,39; வெளி. 19:7-9
No comments:
Post a Comment
Thank you for visiting our page.