*"தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்... என்று கட்டளையிட்டார்" (ஆதி.2:16,17)*
நன்மை தீமை அறியத்தக்க விருட்சமுங்கூட மனிதனின் உபயோகத்திற்காகவே சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் மனிதனுக்கு நலமல்லாத ஒன்றையும் தேவன் சிருஷ்டிக்கவில்லை. ஆனால், மனிதன் ஒரு குறிப்பிட்ட (ஆவிக்குரிய) வளர்ச்சியை அடைந்த பின்னரே புசிக்க வேண்டிய ஒரு "பலமான ஆகாரமாக" அது இருந்ததாகத் தோன்றுகிறது. "பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே (ஆதாம் இந்நிலையை அப்போது அடைந்திருக்கவில்லை) தகும்" (எபி. 5:14). சிறு குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை வந்தெட்டும் வரை அவர்களுக்குப் பால் போன்ற திரவ ஆகாரத்தையே நாம் கொடுக்கிறோம். பலமான ஆகாரத்தை அவர்களுக்கு அளித்தால் அவர்களால் அதை ஜீரணிக்க முடியாது, சில வேளைகளில் அது மரணத்தை உண்டாக்கவும் கூடும். இவ்விதமாகவே தேவன் நியமித்த வளர்ச்சியின் அளவை வந்தெட்டும் முன்னரே ஆதாம் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்ததால், அவன் தன் ஆத்துமாவில் மரணத்தை அனுபவித்தான். மனிதன் முதலாவதாக ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்து ஜீவனில் வளர்ந்த பின்னர், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டுமென்பதே தேவனின் திட்டமாயிருந்தது.
எனவே, தேவபிள்ளைகளே, "நீங்கள் வளரும்படி, திருவசனமாசிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்' (1பேதுரு 2:3) தேவ வார்த்தையைத் தியானிப்பதின் மூலம் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புங்கள். தேவன் விரும்பும் வளர்ச்சியின் நிலையை நாம் வந்தெட்டும்போது, அவர் இன்னும் அழமான சத்தியங்களை நமக்கு வெளிப்படுத்தி, தம்மைக் குறித்த இன்னும் பூரணமான அறிவுக்குள் நம்மை நடத்திச் செல்வார்.

No comments:
Post a Comment
Thank you for visiting our page.