_*இன்று யாரைக் கேட்டாலும் ஜெபிக்க நேரமில்லை என்று சொல்லுகிறார்கள்*_
_கவனியுங்கள்._
_1) 👉 *(ஏனோக்கு)*_
பிள்ளைகள் இருக்கிறார்கள் ஜெபிக்க முடியவில்லை என்கிறார்கள் *சிலர்*
*குமாரையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்த ஏனோக்குக்கு தேவனோடு சஞ்சரிக்க (ஜெபிக்க)நேரமிருந்தது*.(ஆதி-5:24)
_2) 👉 *(மோசே)*_
தேசத்தின் தலைவனாய் உயர்ந்த நிலையில் மோசே நான் இல்லாவிட்டால் காரியங்கள் சரியாக நடக்காது எல்லாம் என் தலையில் தான் நடக்கிறது என சொல்லாமல் *தேவனோடு தனிமையாய் இருக்க நேரமிருந்தது*.(யாத்-34:24)
_3) 👉 *(ஆபிரகாம்)*_
பூமி தாங்க கூடாத செல்வம் திரளான ஆடு மாடு வேலைக்காரர்கள் நிர்வாகிக்க நேரமில்லாமல் மேய்ப்பர்களுக்குள் மோதல் அத்தனை பிரச்சினை மத்தியில் ஆபிரகாமுக்கு ஜெபிக்க நேரமிருந்தது.
(ஆதி -18:22)
_4) 👉 *(தாவீது)*_
சமஸ்த இஸ்ரயேலுக்கும் ராஜா யுத்தம் ,நீதி நியாயம் செய்யணும். ஆனாலும் அந்தி சந்தி மத்தியானம் என மூன்று வேளையும் அரசனான தாவீது க்கு ஜெபிக்க நேரமிருந்தது
.(சங்-55:17)
_5) 👉 *(தானியேல்)*_
அடிமையாக வந்து அரசனுக்கு அடுத்த பதவியில் உயர்த்தப்பட்டாலும், தொழுது கொள்ளக் கூடாது என சட்டம் போட்டு தடுத்தாலும் ஜெபத்திலே தரித்து இருக்க தானியேலுக்கு நேரமிருந்தது.
(தானி-6:10)
_6) 👉 *(சீஷர்கள்)*_
*3000, 5000* என மக்கள் சபையில் சேர்ந்த நேரம் பந்தி விசாரிக்க கூட நேரமில்லாத சூழ்நிலையிலும் சீஷர்களுக்கு ஜெபிக்க நேரமிருந்தது.
(அப்-6:4)
_7) 👉 *(அப்போஸ்தலனாகிய பவுல்)*_
ஐரோப்பிய கண்டம் முழுவதும் சபைகளை ஸ்தாபித்த அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இரவும் பகலும் இடைவிடாமல் ஜெபிக்க நேரமிருந்தது.
(எபே-1:16 )
(1தெச -1:2)
_8) 👉 *(கர்த்தர் இயேசு கிறிஸ்து)*_
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வுக்கு இடைவிடாது ஊழியம். உணவு சாப்பிட கூட நேரமில்லாமல் இருந்தாலும் ஜனங்கள் எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு இருந்தாலும் பிதாவோடு உறவாட பேச நேரமிருந்தது.
லூக்-6:11,12 ,
மாற்கு -6:31,46
ஆனால் இன்று நமக்கு நேரம் இல்லை
கடைசியாக ஆண்டவர் சொல்வார், உன்னை ஆசீர்வதிக்க எனக்கு *நேரம் இல்லை* என்று ஆகவே *ஜாக்கிரதையாக* இருங்கள் ஜெபிப்பதற்கு
_எழும்பி பிரகாசி_ 🔥
No comments:
Post a Comment
Thank you for visiting our page.