எப்படி யுத்தம்பண்ண வேண்டும்?
விசுவாசத்தினாலே அவர்கள்... பலவீனத்தில் பலங்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்" (எபி. 11:33,34)*
நாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, நம்மில் காணப்படும் பெலவீனமான அம்சங்கள் பெலமுள்ளவையாயின என விசுவாசித்து தேவனைத் துதிக்கும்போது, நாம் ஏற்றுக்கொண்டதையும், விசுவாசித்ததையும் ஒருவேளை நம்மால் உடனடியாகவே அனுபவிக்கக் கூடாதிருக்கலாம், காரியங்கள் அதற்கு எதிராகவே இருப்பதாக நமக்குத் தோன்றலாம்.
நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் சிந்தை, சொற்கள் போன்றவற்றில் நமக்குப் பூரண பரிசுத்தம் தேவையாயிருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காகத் தேவனுடைய வார்த்தையை உண்மையாக விசுவாசித்து, அவரது வாக்குத்தத்தங்களின் மேல் உறுதியாக நிற்கத் தீர்மானிப்போமாயின், கொஞ்சக் காலத்திற்காயினும், முன் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நாம் பரிசுத்தமாக்கப்படாதவர்களாய் இருப்பதாக நாம் உணருவோம். இது நம்மை அதைரியப்படுத்திவிடக் கூடாது - பிசாசின் தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. நாம் செய்யும் ஒவ்வொரு பிரதிஷ்டைக்கும், நாம் உரிமைப்பாராட்டும் ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் விரோதமாக, நமது பிரதிஷ்டைகளை நாம் உடைத்துப்போடும்படி செய்யவும், நம்மை மனச்சோர்வடையச் செய்யவும் பிசாசுகள் அனுப்பப்படக் கூடும்.
உதாரணமாக, நாம் மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்து ஜெபிக்கவோ, வேதம் வாசிக்கவோ தீர்மானிக்கிற அன்று இரவு மிகத் தாமதமாகப் படுக்கைக்குச் செல்ல வேண்டியதாகி, அடுத்த நாள் அதிகாலையில் எழுந்திருக்கக் கூடாதவர்களாகலாம் அல்லது மிக அதிகமான தலைவலியோடு எழுந்திருக்கலாம்!
நம்முடைய பெலவீனங்கள் யாவும் பெலனாக மாற்றப்பட்டது என்ற வாக்குத்தத்ததை நாம் பற்றிக்கொண்டால் மட்டும் போதாது; வல்லவர்களாக யுத்தம் செய்யவும் வேண்டும். எனவேதான் *"யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்'* என வேதவசனம் கூறுகிறது. *"நல்ல போராட்டத்தைப் போராடினேன்... விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (1 தீமோ. 4:7)* என அப்.பவுல் கூறுகிறார். மேலும் தேவனின் வாக்குத்ததங்களை முழுமையாய் அனுபவிக்கும் வரை பிசாசின் சேனைகளை நாம் துரத்தியடிக்க வேண்டும். *"பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.(யோவேல் 3:10)* எனவேதான் விசுவாச வீரர்களாயிருக்கும்படி தேவன் பலவீனரைத் தெரிந்துக்கொண்டிருக்கிறார் (1கொரி.1:27)
அருமையானவர்களே, நீங்கள் பரிசுத்தத்திலோ, ஜெப ஜீவியத்திலோ தேவவசனத்தைத் தியானிப்பதிலோ, தேவனை நேசிப்பதிலோ மற்றும் இவை போன்ற ஆவிக்குரிய காரியங்கள் யாதொன்றிலோ பெலவீனராய் இருக்கிறீர்களா? அந்தப் பெலவீனமான பகுதிகள் எல்லாம் உங்கள் வாழ்வின் பலமுள்ள பகுதிகளாக மாறியிருக்கின்றன என்று விசுவாசத்தின் மூலம் உரிமை பாராட்டுங்கள். *நீங்கள் அவ்வப்போது அதைரியம், மனத்தளர்ச்சி, கோபம் மனமுறிவு முதலியவற்றிற்கு இடங்கொடுக்கிறீர்களா? ஜெயத்தை உரிமைப் பாராட்டுங்கள். சரீரப்பிரகாரமான காரியங்கட்கும் இதே வாக்குத்தத்தத்தை விசுவாசத்தினால் உரிமைபாராட்டிக் கேளுங்கள். உங்கள் சரீரத்தின் மிகவும் பெலவீனமான பகுதி, மிகுந்த பெலமுள்ளதாகட்டும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலும் மிகவும் பெலனற்ற பகுதி (மிகப் பெலவீனமான விசுவாசி) மிகுந்த பெலப்பட்டு பெலனுள்ளதாகட்டும்
No comments:
Post a Comment
Thank you for visiting our page.