யோபு இரட்டிப்பான மடங்கு ஆசிர்வாதம் பெற அவரிடம் காணபட்ட நல்ல குணங்கள்
1) கர்த்தருக்கு பயந்தவர் - யோபு 1:1
2) உத்தமர் - 1:1
3) பொல்லாப்புக்கு விலகுகிறவர் - 1:1
4) பாவம் செய்யாதவர் (வாயின் வார்த்தையினால் கூட) - 1:22
5) யோபுக்கு நல்ல மனைவி அமையவில்லை. ஆனாலும் அவருடைய விசுவாசம், பரிசுத்தம் மனைவி மூலம் நஷ்டம் அடையவில்லை. தன் உத்தமத்தில் உறுதியாக இருந்தார் ஆஸ்தியும், ஜசுவரியம், மக்கள் செல்வம் யோபுக்கு குறைவின்றி இருந்த நாளில் அவரை நேசித்து கனப்படுத்தினாள். ஆனால் சூழ்நிலை மாறிய போது அவள் தலைகிழாக மாறிவிட்டாள். தன் புருஷனை சாகும்படியாக ஆலோசனை சொல்லுகிறாள் - 2:9,10
6) கர்த்தரை நம்பினார் - 13:15
7) பரிசுத்தவான் - 1:8
8) தேவனால் சாட்சி பெற்றவன் - 1:8
9) சோதிக்கபட்ட பின்பு பொன்னாக விளங்குவேன் என்று தனது விசுவாசத்தை அறிக்கை செய்தார் - 23:10
10) எக்காலத்திலும் கர்த்தரை துதித்தார் - 1:21
11) பாடுகளில் தேவனை பற்றி குறை சொல்லவில்லை - 1:22
12) விசுவாச வீரர் - 19:25,26
13) நீதிமான் - 32:1
14) தாழ்மையுள்ளவர் - "இதோ நான் நீசன்" என்று தன் உயிரோடிருக்கும் மீட்பருக்கு முன்பாக கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்த யோபு பக்தன் தன்னை தாழ்த்துகிறார் - 40:4
15) மற்றவர்களுக்காக ஜெபித்தார் - 42:10
16) மற்றவர்களுக்கு உதவி செய்தார் - 4:3,4, 31:16-18, 29:15-16
17) கண்களோடு உடன்படிக்கை செய்தவர் (கண்களால் பாவம் செய்யக்கூடாது என்று) - 31:1
18) வேத வசனங்களை அதிகமாக உள்ளத்தில் சேர்த்து வைத்தவர் - 23:12
19) நீடிய பொறுமை உள்ளவர் (பாடுகளில் பொறுமையோடு இருந்தார்) - யாக் 5:11
20) யோபவுக்கு மனைவி, 7 ஆண் பிள்ளைகள், 3 பெண் பிள்ளைகள், 7000 ஆடுகள், 3000 ஒட்டகங்கள், 500 ஏர் மாடுகள், 500 கழுதைகள், ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தார்கள். இவ்வளவு உலக ஆசிர்வாதங்களை இருந்தும் அவனது கண் பார்வை அவைகள் மேல் இல்லை. அவனது வாஞ்சை, கண் பார்வை பரலோகத்தின் மேல் இருந்தது. ஆண்டவரின் வருகையின் மேல் இருந்தது - 1:2,3 / 19:25-27
I'm blessed
ReplyDelete