ஊழியர்களிடம் இருக்க வேண்டியது →
1) இயேசுவை பின்பற்ற வேண்டும் - யோ 12:26
2) நல்ல கனி (நல்ல சுபாவங்கள் காணப்பட வேண்டும்) கொடுக்க வேண்டும் - மத் 7:20
3) எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக இருக்க வேண்டும் - 2 தீமோ 2:24
4) போதக சமர்த்தனாய் இருக்க வேண்டும் - 2 தீமோ 2:24
5) தீமையை சகிக்க வேண்டும் - 2 தீமோ 2:24
6) தேவனுடைய சித்தத்தை மாத்திரம் செய்ய வேண்டும் - லூக் 12:47
7) உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் - லூக் 19:17
8) விவேகமுள்ளவனாக இருக்க வேண்டும் - மத் 24:45
9) தன் எஜமானிலும் பெரியவன் அல்ல (கர்த்தரிலும் பெரியவன் அல்ல) - யோ 15:20
10) தாழ்த்த வேண்டும் (அப்பிரயோஜனமான ஊழியர் என்று) - லூக் 17:10
11) தேறின வேதபாரனாக இருக்க வேண்டும் (மத் 13:52)
12) தாகம் வேண்டும் (ஆத்துமாக்களை குறித்து) - யோ 4:8
13) தீங்கு அனுபவிக்க வேண்டும் - 2 தீமோ 4:5
14) மனத் தெளிவுள்ளவனாக இருக்க வேண்டும் - 2 தீமோ 4:5
15) உத்தமனாக இருக்க வேண்டும் - 2 தீமோ 2:15
16) சத்திய வசனத்தை பகுத்து போதிக்க வேண்டும் - 2 தீமோ 2:15
17) ஜெப ஜிவியம் காணப்பட வேண்டும் - அப்போ 6:4
18) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருக்க வேண்டும் - அப்போ 2:18
19) சத்தியத்தை சத்தியமாக போதிக்க வேண்டும் - மத் 3:7
20) தேவ ஊழியர்களின் வாழ்க்கை விசுவாசிகள் பின்பற்ற கூடியதாக இருக்க வேண்டும் - 1 கொரியா 4:16
21) ஊழியர்களின் ஜிவியத்தின் மூலம் தேவ நாமம் மகிமை அடைய வேண்டும் - கலா 1:24
No comments:
Post a Comment
Thank you for visiting our page.