Tamil sermon outlines
*பிரசங்கி 5:4*
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே, அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச் செய்.
*1. ஞானஸ்நானம் எடுக்க தாமதிக்காதே*
=======================
*அப்போஸ்தலர் 22:16*
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
*2. பொருத்தனைகளை நிறைவேற்ற தாமதிக்காதே*
========================
*உபாகமம் 23:21*
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே, உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார், அது உனக்குப் பாவமாகும்.
3. கற்பனைகளை கைக்கொள்ள தாமதிக்காதே*
========================
*சங்கீதம் 119:60*
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
*4. தேவனுடைய ஆலயத்தை பழுதுப் பார்க்க தாமதிக்காதே*
(கட்டிடத்தையும் , நம்முடைய சரீரத்தையும்)
========================
*2 நாளாகமம் 24:5*
அவன் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸரவேலெங்கும் பணம் சேகரியுங்கள், இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான், ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
*5. இயேசு கிறிஸ்து தேவன் என்று பிரசங்கிக்க தாமதிக்காதே*
=======================
*அப்போஸ்தலர் 9:20*
தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
====================
No comments:
Post a Comment
Thank you for visiting our page.