Fellowship / ஐக்கியம் | Tam sermon outlines | Tamil sermon notes - Christian Short Sermons and Tamil Sermon Outlines

New Levels Ministries Official - We welcome to our site! We will be uploading Christian short sermons! Biblical Sermons! Bible studies! Motivational sermons! inspirational sermons! Bible theologies! Bible verses! Short inspirational sermons! Awakening sermons! bible doubt's! Biblical thoughts! Inspirational quotes! Today's bible verse! Tamil Sermon outlines! English sermon points! Sermon notes! Best Christian short sermons!

Breaking

.

.

Sunday, 29 August 2021

Fellowship / ஐக்கியம் | Tam sermon outlines | Tamil sermon notes

 *Fellowship / ஐக்கியம்*




*1. Fellowship with The Father & The Son*


1 யோவான் 1:3 - நீங்களும் *எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி*, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; *எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது*.


1 யோவான் 1:6 - நாம் *அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று* சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.


1 யோவான் 1:7 - அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் *ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்*; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.


*1.1 Fellowship of the Mystery*


எபேசியர் 3:8-11 - பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


9. தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,


10. உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,


11. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த *தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம்* இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.



*2. Fellowship with Jesus*


1 கொரிந்தியர் 1:9 - தம்முடைய குமாரனும் நம்முடைய *கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு* உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.


யோவான் 15:4-12 - *என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்*; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.


5. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். *ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால்*, அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.


6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.


7. *நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்*, நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.


8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.


9. பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; *என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்*.


10. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் *என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்*.


11. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.


12. *நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல* நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.



*3. Fellowship with the Holy Spirit*


2 கொரிந்தியர் 13:14 - கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், *பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும்*, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.


1 யோவான் 4:13 - அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.


1 கொரிந்தியர் 10:16 - நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் *ஐக்கியமாயிருக்கிறதல்லவா?* நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் *ஐக்கியமாயிருக்கிறதல்லவா?*


பிலிப்பியர் 2:1-5 - ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், *ஆவியின் யாதொரு ஐக்கியமும்*, யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,


2. நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.


3. ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.


4. அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.


5. *கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது*;



*4. Fellowship of the Gospel*


யோவான் 15:7 - *நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்*, நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.


பிலிப்பியர் 1:3-6 - *சுவிசேஷம்* உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு *உடன்பட்டவர்களானபடியால் (Fellowship in the Gospel)*,


4. நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,


5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,


6. நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.



*4.1 Abiding in Jesus = Obeying the Word of God*


யோவான் 15:7 - *நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்*, நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.


யோவான் 8:31 - இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் *என் உபதேசத்தில் நிலைத்திருந்தால்* மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;


2 யோவான் 1:9 - *கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல்* மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.


4.1 One God

4.2 Jesus name baptism

4.3 Fruit of the Spirit


ரோமர் 6:22 - இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு (Belief in Jesus, Repentance, Jesus name Baptism), தேவனுக்கு அடிமைகளானதினால் (Fruit of the Spirit), பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன் (Sanctification), முடிவோ நித்தியஜீவன் (Eternal Life).



*5. Fellowship with brothers & sisters*


அப்போஸ்தலர் 2:42 - அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும் (Fellowship), அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.


அப்போஸ்தலர் 2:44-47 - விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.


45. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.


46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,


47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.


அப்போஸ்தலர் 4:32 - விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் *ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்*. ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.


அப்போஸ்தலர் 17:11 - அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று *தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்*, தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.


1 யோவான் 1:3 - நீங்களும் *எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி*, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.


பிலேமோன் 1:17 - ஆதலால், நீர் *என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால்*, என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.


எபிரெயர் 10:24 - மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;


25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.



*5.1 Test of Fellowship*


கலாத்தியர் 5:9 - புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.


1 கொரிந்தியர் 15:33 - மோசம்போகாதிருங்கள். *ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.*


2 கொரிந்தியர் 6:14-18 - அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?


15. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?


16. *தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?* நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.


17. ஆனபடியால், *நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்*, அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


18. *அப்போது*, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.


2 தெசலோனிக்கேயர் 3:6 - மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், *ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.


2 தெசலோனிக்கேயர் 3:14 - மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு *அவனுடனே கலவாதிருங்கள்.*


ரோமர் 16:17 - அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் *பிரிவினைகளையும் இடறல்களையும்* உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, *அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.*


1 கொரிந்தியர் 5:11 - நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால் *சகோதரனென்னப்பட்ட ஒருவன்* விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரானாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது. *அப்படிப்பட்டவனோடேகூடப் புசிக்கவுங்கூடாது.*


தீத்து 1:16 - அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்னுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்: அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும் *எந்தநற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.*


தீத்து 3:10 - *வேதப்புரட்டனாயிருக்கிற* ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு *அவனைவிட்டு விலகு.*


1 தீமோத்தேயு 6:3-5 - ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், *வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,*


4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான். அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,


5 கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் *தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று* எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். *இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.*



*5.2 Fellowship: கள்ள சுவிசேஷம் போதிப்பவர்களை வீட்டிலே ஏற்றுக்கொள்ளாதிருங்கள்*


2 யோவான் 1:9-11 - *கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல்* மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;.


10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை *உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.*


11 *அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.*


2 கொரிந்தியர் 11:4 - எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத *வேறொரு இயேசுவைப்* பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத *வேறொரு ஆவியையும்,* நீங்கள் ஏற்றுக்கொள்ளாத *வேறொரு சுவிசேஷத்தையும்* பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.



*5.3 Fellowship: வசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களிடமிருந்து விலகி இருங்கள்*


2 தீமோத்தேயு 3:1-5 - மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.


2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,


3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,


4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,


5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; *இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு*.



*5.4 Home Fellowship In The New Testament Church*


மத்தேயு 18:20 - ஏனெனில், *இரண்டுபேராவது மூன்றுபேராவது* என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.


ரோமர் 16:5 - அவர்களுடைய *வீட்டிலே கூடிவருகிற சபையையும்* வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.


1 கொரிந்தியர் 16:19 - ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் *வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக்* கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.


கொலோசெயர் 4:15 - லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் *வீட்டில் கூடுகிற சபையையும்* வாழ்த்துங்கள்.


பிலேமோன் 1:2 - பிரியமுள்ள அப்பியாளுக்கும் எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய *வீட்டிலே கூடிவருகிற சபைக்கும்* எழுதுகிறதாவது:


அப்போஸ்தலர் 20:20-21 - பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக *வீடுகள்தோறும்* உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம்பண்ணி,


21. தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.



*6 Love one another*


1 யோவான் 1:6 - நாம் *அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும்*, இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.


1 யோவான் 2:6 - அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், *அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்*.


யோவான் 13:15 - நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.


1 யோவான் 2:5 - அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் *தேவ அன்பு* மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.


1 யோவான் 3:6 - அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.


1 யோவான் 4:20-21 - தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், *தன் சகோதரனைப் பகைத்தால்*, அவன் பொய்யன்; *தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?*


21. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.


1 யோவான் 2:9-11 - ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.


10. தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.


11. *தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்*; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.


1 யோவான் 3:16 - அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.


யாக்கோபு 2:17 - அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.


யாக்கோபு 2:26 - அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.



*7. Fellowship of His sufferings*


பிலிப்பியர் 3:10-11 - இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், *அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும்* அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,


11. அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.


யோவான் 16:33 - என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு *உபத்திரவம் உண்டு*, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.


அப்போஸ்தலர் 14:22 - சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் *அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று* சொன்னார்கள்.


2 தீமோத்தேயு 3:12 - அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற *யாவரும் துன்பப்படுவார்கள்*.


1 பேதுரு 4:13-14 - கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக *அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்*.


14. நீங்கள் *கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்*; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.



*8. Do not have Fellowship with devils*


1 கொரிந்தியர் 10:20 - அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை *தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே* பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் *பேய்களோடே ஐக்கியமாயிருக்க* எனக்கு மனதில்லை.


1 கொரிந்தியர் 10:14-21 - ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.


15. உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.


16. நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் *கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?* நாம் பிட்கிற அப்பம் *கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?*

17. அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.


18. மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் *பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?*


19. இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?


20. அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் *பேய்களோடே ஐக்கியமாயிருக்க* எனக்கு மனதில்லை.


21. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.

No comments:

Post a Comment

Thank you for visiting our page.

Recent posts

.

Comments

recentcomments

.

.

Christian Short Sermons and Tamil Sermon Outlines
Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Home Top

Post Top

Tags

Followers

New Levels Ministries

.

Translate

Wikipedia

Search results

Popular Posts

.

Pages