முழங்கால்களில் ஆரம்பமாகட்டும். அது ஒன்றே ஒன்றுதான் நமது இகலோக வாழ்வின் தேவை என்று தேவனே திட்டமாகச் சொல்லியிருக்கின்றார் (லூக்கா 10 : 42) சங்கீதக்காரரும் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங் 73 : 25) என்று தமது வாழ்வின் அனுபவத்தின் மூலம் அதை நமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றார். தேவன் நமக்கு கிருபையாக கொடுத்திருக்கும் இந்த பொற் காலங்களை மிகுந்த ஞானத்துடன் பயன்படுத்தி நமக்கு முன்னாலுள்ள நித்திய பேரின்ப வாழ்வுக்கு நம்மை நன்கு ஆயத்தம் செய்து கொள்ளுவோம்.
தேவ ஜனமே, உங்கள் இருதய பலகையில் இரும்பு எழுத்தாணியால் இன்றே எழுதிக் கொள்ளுங்கள். கரும்பெட்டி, அது உங்கள்ஆத்துமாவின் சவப்பெட்டி!
No comments:
Post a Comment
Thank you for visiting our page.